என் கவிதைகள்

மாறாத ராகம்

%e0%ae%9c%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be

அன்று முதல் இன்றுவரை
ஆண்டுகள் உருண்டோடினாலும்
மாறாத அதே ராகம்

தெருவில் ஒலிக்கும்
“அம்மி கொத்தலையோ அம்மி”

கட்டுமர கடலோசைகளினூடே
“ஏலேலோ ஐலஸா”

பிறந்தநாள் கொண்டாட்டங்களில்
“ஹாப்பி பார்த் டே டூ யூ

குடுகுடுப்பைக்காரனின்
“ஜக்கம்மா..! நல்ல காலம் பொறக்குது..!”

அரசியல் தொண்டர்களின்
“இந்தப்படை வேண்டுமா
இன்னும் கொஞ்சம் வேண்டுமா?”

மணவிழாக்களில் முழங்கும்
“மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேதுனா”

1002

இரவுகளை பரிகாசிக்காதீர்கள்

%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81

இரவுகளை பரிகாசிக்காதீர்கள்
பயமுறுத்துவதற்கல்ல …
பக்குவப்படுத்த வருபவை அவைகள்

சித்தார்த்தனை புத்தனாக்கியது
நித்திரை இரவு

சித்தர்களையும் சூஃபிக்களையும்
முக்திபெற வைத்ததும் இரவுதான்

கணக்கற்ற காப்பியங்களின்
கற்பனைச் சுரங்கம் அது
களங்களின் பிறப்பிடம்
கனவுகளின் உறைவிடம்
சகாப்த கோலங்களின் தொடக்கப் புள்ளி
சரித்திர ஓட்டங்களின் ஜீவஜோதி

இரவுகளை பரிகாசிக்காதீர்கள்…..

இரவுகள்……..
சாத்தான்களின் நடமாற்றத்திற்கல்ல
சாதனைகளின் நிறைவேற்றத்திற்கு

என் தேசத்திற்கு
விடியலைப் பெற்றதும் இரவில்தானே !

வெ|ளிச்சத்தையே விரட்டியடிக்கும்
வீரியம் ……
நட்சத்திரங்களை பிரகாசிக்க வைக்கும்
தைரியம் …..
சபாஷ் போட
இரவுகளுக்கு
முதுகுகள் இல்லை.

இரவுகள்……
விழிகளுக்கு ஒத்தடம் தரும்
மண்முடிச்சு.
நிசப்தங்களை வருடிக்கொடுக்கும்
மயிலிறகு.

யதார்த்தங்களை புரியவைக்க
இறைவன் அளித்த நன்கொடைதான்
இரவும் பகலும்.

வாழ்க்கை அத்தியாயத்தில்
முன்னுரையும் இருட்டு
முடிவுரையும் இருட்டு
ஆம்..
கருவறையும் இருட்டு
கல்லறையும் இருட்டு

இரவும் பகலும்
மாறி மாறி வருவது
இன்பத்தையும் துன்பத்தையும்
யதார்த்தமாக பிரதிபலிக்கத்தான்

இரவுகள் எப்போதும் உறங்குவதில்லை
விடியலை எதிர்கொள்ள
விழித்துக் கொண்டே இருக்கும்.

அதனால்தான்
இரவுகளுக்கு
மின்சார அலங்காரம்.

“மாலை”யுடன் வரவேற்கப்படுவது
இரவுகள்தானே தவிர
பகற்பொழுதுகள் அல்ல

இரவுகளை பரிகாசிக்காதீர்கள்…..

பகற்கொள்ளையர்கள் இல்லாததினால்தான்
தங்கமுலாம் பூசிய பெளர்ணமிநிலாகூட
பயமில்லாமல் வருகிறது உலா.

ஒவ்வொரு அஸ்தமணத்திற்குப் பின்பும்
ஒரு விடியல் உத்தரவாதம்

இரவுகள் மீது
யாருக்குத்தான் ஆத்திரம் இல்லை?
வேறென்ன? பொறாமைதான்
அந்தியின் சிவப்பு
வானத்தின் கோபம்

இரவுகள் …..
அமைதியின் கர்ப்பக்கிரகம்
மோன நிலையின் முகத்துவாரம்
யாரும் அறியாவண்ணம்
இறைவனை நினைந்துருகும் அரியாசனம்

இரவுகளை பரிகாசிக்காதீர்கள்.

– அப்துல் கையூம்

1002

வாக்கிங்

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d

காந்திஜி நடந்து போனா 
அதுக்கு பேரு பாத யாத்திரையாம்
வைகோ நடந்து போனா
அதுக்கு பேரு நடை பயணமாம்
தளபதி நடந்துப் போனா
அதுக்கு பேரு விடியல் மீட்புப் பயணமாம்

இன்று காலை நானும்தான் நடந்து போனேன்.
என்ன சார் வாக்கிங் போறீங்களா?” என்கிறார் நண்பர்.

அப்துல் கையூம்

எது அதிசயம்?

mother

இணையத்தில் தேடினேன்
என்சைக்ளோபீடியாவில் தேடினேன்

ஏழு அதிசயங்கள்தான்
எல்லாவற்றிலும்
இடம்பெற்றிருந்தது.

ஏனோ தெரியவில்லை
எதிலும் குறிப்பிடவேயில்லை.
“அம்மா” என்று

– அப்துல் கையூம்

கனவுகளும் ரஜினியும்

dreams
கனவுகளுக்கு உருவம் உருவமுள்ளதா..?
ஆம். உள்ளது;
இல்லையெனில்
எப்படி அதனை நாம்
காண முடியும்?

காற்றையோ, கடவுளையோ
காணமுடியாத நாம்
கனவுகளைக் காண்கின்றோமே..?

கனவுகள் காணச்சொன்ன
ஐயா அப்துல் கலாம்
பொய் பேச மாட்டாரே..?

கனவுகளுக்கு அங்கங்கள் உள்ளதா..?
ஆம். உள்ளது;
இல்லையெனில்
எங்ஙனம் அது
சிறகுகளை விரிக்க முடியும்?

கனவுகள் திடப் பொருளா?
ஆம். திடப்பொருள்தான்.
கனவுகள் சிதறுகிறதே..?
கனவுகள் உடைகிறதே..?
கனவுகள் தூள்தூளாகிறதே..?
கனவுகள் காணாமல் போகிறதே?

பாரதி சொன்ன
நிற்பனவே..!, நடப்பனவே..! பறப்பனவே..!
இது கனவுகளுக்கும் பொருந்தும்.

கனவுகள் பறக்கும்..
கனவுகள் நடக்கும்..
கனவுகள் நடக்காமல் நின்றுபோகும்..!

கனவுகள் ரஜினி மாதிரி
எப்ப வரும்..?
எப்படி வரும்..?
யாருக்குமே தெரியாது..!

– அப்துல் கையூம்

கடவுள் நம்பிக்கை

beautu

அவன் ஆத்திகன் ஆனான்.
அவள் அழகை
அருகாமையில்
அனுபவித்து ரசித்தபின்


அன்றி..
அப்படியொரு
அட்டகாசமான
அழகான படைப்பு
அதுவாகவே வடிவெடுத்திட
அறவே வாய்ப்பில்லைதானே..?

யார் அழுவார்கள்..?

death

என் மரணத்தின்போது
யார் யார் அழுவார்கள் என்று
அனுமானித்து விட்டேன் !

இதோ
பட்டியலும் தயார்..!

அந்த பட்டியலில்
நண்பர்கள் சிலரின் பெயர் கிடையாது.
விரோதிகள் பலரும் உண்டு !

அன்பாக நடித்தவர்களின்
அரிதாரம் கலைவதைப் பார்த்து
அன்று நான் அதிர்ந்து சிரிப்பேன்..
அது யார் கண்ணுக்கும் புலப்படாது !

அதோ…
வாசற்படியில் நிற்பது யார்..?
வாழ்வில் ஒரே ஒரு முறை
வழிப்பயணத்தில் சந்தித்த அவரும்
வாய்விட்டு அழுதபடி நிற்கிறாரே..!

இந்த உலகம்தான்
எவ்வளவு சிறியது…?
ஒரே முகத்தை எத்தனை முறை
திரும்பத் திரும்ப
சந்தித்துவிட்டோம்…

நான்
உயிருக்கு உயிராக எண்ணிய
ஒரு நண்பனையும் இக்கூட்டத்தில்
காணவே முடியவில்லை

அவர்களை எப்படி நான்
அல்பத்தனமாய் குறை கூற முடியும்?
அவர்கள்தான் பணம் எண்ணுவதில்
அவசர பிஸியாக இருக்கிறார்களே…?

சிரி மனிதா..!

Beautiful smiling cute baby

சிந்திப்பாய் மனிதா….

சிரிக்கத் தெரிந்தவன்
நீ மட்டும்தான்..!

ஐந்தறிவு பிராணிக்கு கிடைக்காத
அதிர்ஷ்ட வரம்
உனக்கு மட்டும்தான்….!

பூட்டிப் பூட்டி வைக்க -அது
பொக்கிஷமும் அல்ல …
புன்சிரிப்பை உதிர்த்தால் – எதுவும்
குறைந்து போவதும் அல்ல ….

துன்பத்திலும் சிரி – உன்
துயரை அது குறைக்கும் !
வாய்விட்டுச் சிரி – உன்
நோய்விட்டுப் போகும் !

ஆயுளை நீட்டிக்கும்
அற்புத தாதுபுஷ்டி உன் சிரிப்பு !
அடுத்தவரை நேசிக்கவைக்கும்
வசீகர லேகியம் உன் சிரிப்பு !

உடலுக்கு சவுக்காரம் போல
உள்ளத்தை அது சுத்தம் செய்யும் !
வயதை நீட்டிக்கும் வாய்தா
உன் வாய்ச்சிரிப்பு !

அழுவதைக் காட்டிலும்
குறைந்த அளவு தசைகளைதான்
நீ இன்முகத்துடன் இயக்குகிறாய்..!

அழுகையால் சாதித்தவர்களைக் காட்டிலும்
புன்சிரிப்பால் சாதித்தவர்கள்தான் அதிகம் !

இருவருக்கும் இடையே உள்ள
இடைவெளியைக் குறைப்பதற்கு – நீ
எதுவுமே செய்ய வேண்டாம்
சற்று சிரித்தாலே போதும்…!

எங்கே சிரி பார்ப்போம்?

நனவாகா கனவுகள்

dreams

கனவுகளை நான் சேகரிக்கிறேன்
சில்லறைகளாக ஓர் உண்டியலில்
சேமித்து வைக்கிறேன் ….
நாளை அவை ஒவ்வொன்றையும்
நோட்டுக்கட்டுகளாக உருமாற்றத்தான்.

சில்லறைகள் ஒவ்வொன்றையும்
உண்டியலில் இடுகின்ற போதும்
“கிளிங்ங்ங்…” என்ற உலோக சப்தம்
என் உள்ளத்தில் கிலுகிலுப்பை ஆட்டும்

உண்டியளுக்குள்தான்
எத்தனை விதமான கனவுகள்..?
பால்ய வயதுக் கனவுகள்..
இளம்பிராயத்துக் கனவுகள்..
வாலிபக் கனவுகள்..
குடும்பஸ்தனின் கனவுகள்….

ஒவ்வொரு கனவுகளும்
ஒவ்வொரு மாதிரி…
சதுரமான; தட்டையான; உருண்டையான
செம்பு, பித்தளை, ஈயக்காசுகளைப் போல

ஒருநாள் உண்டியலை
குலுக்கிப் பார்த்தேன்..
அப்பப்பா,,,
என்ன ஒரு கனம்..?
திருப்பதி உண்டியலாய். கனக்கிறது…

உடைக்கலாமா..? வேண்டாமா?
ஊஹூம்.. தள்ளிப் போட்டேன்

அதற்கென்று ஒருநாள் வரும்
அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம்

பாழாய்ப்போன முதுமை
அதற்குள் வந்து விட்டது..

உண்டியலில் உள்ள
சில்லறைகளை மாற்ற
ஒருநாள் எடுத்துச் சென்றேன்.

எல்லாமே செல்லாக் காசாம்..
எல்லோரும் சொன்னார்கள்

நான்தான்
காலம் கடத்திவிட்டேனோ..?

…அப்துல் கையூம்

குழல் இனிது, யாழ் இனிது, ராகமும் இனிது

6

தொந்தி சரிந்த வீணையில்
தந்திகள் மீட்டப்பட்டு
பிரசவ வலியின் முனகலாய்
வெளிவரும் ஸ்வரங்கள்…

ராகக் குழந்தையை
அள்ளி எடுத்து
கொஞ்சும்போதுதான் அதன்
அருமை பெருமை தெரிகிறது.

வள்ளுவா!
குழலும் இனிது
யாழும் இனிது
ராகக்குழந்தையின்
மழலையும் இனிது.

– அப்துல் கையூம்