[மனதில் தோன்றியதை கிறுக்கியிருக்கிறேன். வார்த்தைகளை மடக்கி எழுதுவதால் மட்டும் இது கவிதையாகி விடாது.]
எப்படியெல்லாம் மாறிவிட்டது நம்
இயல்பான வாழ்க்கை?
சிரிக்க மறந்த நமக்கு
சிரிக்க கற்றுத்தர
Laughter Yoga தேவைப்படுகிறது
வாழக் கற்றுத்தர நமக்கு
Art of Living தேவைப்படுகிறது.
எதை சாப்பிடவேண்டும்
எதை சாப்பிடக்கூடாது
எப்படி சாப்பிட வேண்டும்
Dietician நமக்கு அறிவுறுத்துகிறார்.
எப்படி நடக்க வேண்டும்
எப்படி உட்கார வேண்டும்
எப்படி குனிய வேண்டும்
Fitness Coaching அளிக்கப்படுகிறது
அம்மாவிடம் கற்றுக்கொண்ட வீட்டுக் கலையை
நம் பெண்பிள்ளைகள் Home Science என்ற பெயரில்
கல்லூரியில் காசு கொடுத்து கற்கிறார்கள்.
சம்மர் கிளாஸ் போகாத பிள்ளைகள்
சமர்த்தானவர்ள் கிடையாதாம் !
தொழில்கள் கூட புதுப்புது பெயர்களில்..
அன்று நாவிதர் சலூன்கடைக்காரர் ஆனார்
இன்று சலூன்கடைக்காரர் Hair Dresser ஆகிவிட்டார்!!
கக்கூஸ் என்றால் கெட்டவார்த்தையாம்
Rest Room என்றால்தான் நாகரீகமாம்!!
ஆங்கிலம் தெரியாவிட்டால் அவர் டைலர்
ஆங்கிலம் பேசத்தெரிந்தால் அவர் Fashion Designer
உடலைச் சோதிக்க மருத்துவரிடம் சென்றோம்
இப்போது ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு டாக்டர் !!
கண்ணுக்கென்று தனி
காதுக்கென்று தனி
எலும்புக்கென்று தனி
நரம்புக்கென்று தனி.
அடுப்பங்கரையிலிருந்து வருவதைக்காட்டிலும்
ஆன்லைன் ஆர்டரில் வந்தால்தான்
குழந்தைகளின் முகத்தில் புன்னகை பூக்கின்றன !!
கைதட்டி அழைக்கும் துரத்தில் ஆட்டோ இருந்தாலும்
கால் போட்டு அழைக்கும் ஓலாவும் ஊபரும்தான் வேண்டுமாம்.
எப்படியெல்லாம் மாறிவிட்டது நம்
இயல்பான வாழ்க்கை?