படிதாண்டாப் பத்தினி

“படிதாண்டா பத்தினி” என்ற சொற்பதத்தை யாராவது உபயோகித்தால் எனக்கு பற்றிக் கொண்டு வரும்.

அது என்னய்யா படிதாண்டா பத்தினி?

பத்தினியாக இருக்க வேண்டுமென்றால் வீட்டுப் படியைத் தாண்டக் கூடாதா என்ன? பெண் என்பவள் எத்தனையோ விடயங்களுக்காக வீட்டை விட்டு வெளியே போக நிர்ப்பந்திக்கப்படுகிறாள்.

வேலைக்கும் போகும் பெண்கள் உண்டு. கல்விக்கூடங்களுக்கு போகும் பெண்கள் உண்டு. கைத்தொழில் கற்றுக் கொள்ள போவோர் உண்டு. கோயில் , மருத்துவமனை போன்ற இடங்களுக்கு போய் வர வேண்டிய வேலைகள் உண்டு.

கணவரோடு சேர்ந்து போகும் இடங்கள் உண்டு. உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், பிள்ளைகள் அல்லது தனியே போய் வர வேண்டிய சூழ்நிலைகள் உண்டு. எல்லாவற்றிற்கும் வீட்டுப் படியைத் தாண்டித்தானே போக வேண்டும்? அப்படி படிதாண்டிச் சென்றால் அவர்கள் பத்தினி இல்லையா..?

பெண்களை இழிவுபடுத்த இதைவிட வேறென்ன வேண்டும்..? “மாதர் தம்மை இழிவு செய்யும்: மடமையைக் கொளுத்துவோம்” என்று பாரதி பாடியதெல்லாம் வீண்தானா?

ஒரு புகழ்ப்பெற்ற அரசியல்வாதி “அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல; நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும் அல்ல” என்று பேசியதாக சொல்லப்பட்ட சொற்றொடர் ஒரு காலத்தில் மிகவும் சர்ச்சைக்குள்ளானது.

கற்புக்கரசி என்று போர்றப்படும் கண்ணகி கூட தனக்கு நீதி கிடைக்க வேண்டி தன் வீட்டுப் படியைத்தாண்டி, அரசனின் அரண்மனைப் படியைத்தாண்டிதானே மன்னவனுக்கு தன் தவற்றை உணர்த்தி அவனை மடியச் செய்தாள்?

“படிதாண்டா பத்தினி” என்ற சொற்றொடர் எதனால் ஏற்பட்டிருக்கும் என நான் தமிழறிஞர்கள் சிலரிடம் விசாரித்துப் பார்த்தேன். . அவர்கள் நான்கு விதமான காரணங்களைக் கூறுகிறார்கள். (ஒரு பெண் வீட்டுக் லேட்டா வந்தா இப்படித்தான் நாலு பேரு நாலு விதமாக பேசுவாங்களோ..?

1) இராமன் கிழித்த கோட்டை சீதை தாண்டினாள் என்பதற்காக இப்பழமொழி ஏற்பட்டிருக்கலாம் என்றார் ஒருவர்.

2) தன் கணவன் மீது அபாண்டமாக விழும் பழியை மனைவியானவள் ஒருபோதும் தாங்கிக் கொள்ள மாட்டாள். “பழி தாங்காப் பத்தினி” என்ற சொற்றொடர்தான் மருவி “படிதாண்டா பத்தினி” என்று ஆகியது என்கின்றனர் சிலர்.

3) கணவனுக்கு வடமொழியில் பதி என்பர். பத்னி என்றால் மனைவி. கணவனின் (பதி) பேச்சை மீறாதவள் பத்தினி என்ற அர்த்தத்தில் இச்சொற்றொடர் உருவானது என்கின்றனர் சிலர்.

4) கவிஞர் கண்ணதாசன் கூறிய விளக்கம் சற்று மாறுபட்டிருந்தது. கல்யாணத்தின் போது மூன்று முடிச்சு போடுவதன் சாத்திரம் 1) கணவனுக்கு அடங்கியவள் 2) தாய் தந்தையருக்கு கட்டுப்பட்டவள் 3) தெய்வத்திற்கு பயந்து நடப்பவள். அருந்ததி பார்ப்பதின் சடங்கு அருந்ததி போல கற்பு நட்சத்திரமாக நின்று மின்னுவேன் என்பதாம். அம்மி மிதிப்பதன் நோக்கம் இந்த படியின் மீது ஆணையாக கணவனின் பேச்சுக்கு மாறாக நடக்க மாட்டேன் என்பதாம்.

எது எப்படியோ.. அடுக்கு மாடி குடியிருப்புகளில் இன்றைய நகரத்து பெண்கள் பெரும்பாலானோர் வசிப்பதால் “லிஃப்ட் தாண்டா பத்தினி” அல்லது “எஸ்கலேட்டர் தாண்டா பத்தினி” என்ற புதிய சொற்றொடர் எற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

#அப்துல்கையூம்

/கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை//

ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; கல்வியைத் தவிர மற்றவை அத்தகைய சிறப்புடைய செல்வம் அல்ல என்பது இக்குறளின் கருத்து.

Ham என்றால் பன்றிக்கறி.
எப்படி Hamburger-க்கும் பன்றிக்கறிக்கும் சம்பந்தமில்லையோ….

எப்படி Hot Dog-க்கும் நாய்க்கும் சம்பந்தமில்லையோ
.
எப்படி செங்கோட்டையனுக்கும், செங்கோட்டை கட்டிய ஷாஜகானுக்கும் சம்பந்தம் இல்லையோ
.
அதுபோன்று திருவள்ளுவர் சொல்கின்ற மாடு என்ற சொற்பதத்திற்கும் நாம் வீட்டில் வளர்க்கும் மாட்டுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.

தமிழ்… தமிழ் … என மேடை முழுவதும் முழங்கி தமிழுணர்வை உசுப்பேற்றி வரும் அரசியல்வாதி ஒருவர் ஒரு கூட்டத்தில் பேசியது.

“நாம ஏன் மாடு வளர்க்கக் கூடாது. மாடு வளர்ப்பது கேடா? மாடல்ல மற்றயவை என்று தமிழ் மறை கற்பிக்குது. நாம அன்னையிலிருந்து மாடு மேய்ச்சோம்” என்று உணர்ச்சி பொங்க சொற்பொழிவாற்றிவிட்டு ஒரு வெடிச் சிரிப்பை
ஹா… ஹா.. ஹா… என உதிர்க்கிறார்.

கூட்டத்தில் கைத்தட்டல் வானைப் பிளக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s