(2014-ஆம் ஆண்டு ரமலான் மாதத்தின்போது நானெழுதிய கவிதை இது)
தாம்பரம் அருகில்
தவணை முறையில்
தனிமனை விற்பனை
தாங்க முடியாத கூட்டம் ..!
சரவணா ஸ்டோரில்
சகாய விலையில்
சிறப்புத் தள்ளுபடியாம்
செமையான கூட்டம்…!
சேதாராம் இல்லையாம்..!
செய்கூலி இல்லையாம்..!
கல்யாண் ஜுவல்லர்ஸில்
கட்டுக்கடங்காத கூட்டம்…!
ஆண்டுக்கொருமுறை
ஆடித் தள்ளுபடியாம்
ஹனீபா டெக்ஸ்டைல்ஸில்
அலைமோதும் கூட்டம்…!
நல்ல நல்ல வாய்ப்பை
நழுவ விட்டால்
நான்தான் நஷ்டவாளியாம்
நண்பன் சொன்னான்.
வா நண்பா!
பள்ளிவாயில் செல்வோம்.
ஒரே இரவில் ஓராயிரம் போனஸ்.
இன்று “லைலத்துல்கத்ர்” இரவு
– அப்துல் கையூம்
(“லைலத்துல் கத்ர்” = ஆண்டவனால் திருமறை அருளப்பட்ட இரவு. ஆயிரம் மாதங்களுக்கு இணையான புண்ணியம் சேர்க்கும் இரவு)